நிலாவில் மனிதர்கள் வாழ்வது சாத்தியம்! விஞ்ஞானிகள் அறிவிப்பு
25 புரட்டாசி 2017 திங்கள் 12:36 | பார்வைகள் : 9148
பூமியைத் தாண்டியும் விண்வெளியில் உள்ள கிரகங்கள் மற்றும் துணைக் கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வது தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
மனிதர்களை அங்கு குடியேற்றுவதே இவர்களின் பிரதான நோக்கமாக இருக்கின்றது.
இந்நிலையில் அடுத்து வரும் 10 வருடங்களில் சிறிய தொகை கொண்ட மனிதர்கள் பூமியின் துணைக் கிரகமான நிலாவில் வாழ்வது சாத்தியம் என European Space Agency (ESA) விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது அதனைத் தொடர்ந்து வரும் அடுத்த 10 வருடங்களில் ஏராளமான மக்கள் அங்கு வாழ்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 2030ம் ஆண்டிலிருந்தே இது சாத்தியப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் நிலாவில் குழந்தைகள் பிறப்பதற்கான சூழல் இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.