Paristamil Navigation Paristamil advert login

ஒளியை விழுங்கும் கறுப்புக் கிரகம்!

ஒளியை விழுங்கும் கறுப்புக் கிரகம்!

19 புரட்டாசி 2017 செவ்வாய் 11:47 | பார்வைகள் : 9634


 WASP-12b என்ற கிரகத்தைப் பற்றி ஆராய்ந்துவரும் விஞ்ஞானிகள், அதனைப் பற்றிய அதிசயத் தகவல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

 
அதிக வெப்பமான அந்தக் கிரகம் ஒளிக்கதிர்களை எதிரொளிக்காது. அதனால் அதன் தோற்றம் நித்தம் கறுப்பாகவே இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
கனடாவின் மெக்கில்(McGill) பல்கலைக்கழகத்தையும் எக்ஸெட்டர்(Exeter)பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த விஞ்ஞானிகளைக் கொண்ட குழு அதனைக் கண்டுபிடித்திருக்கிறது.
 
நமது சூரியனைப் போன்ற நட்சத்திரம் ஒன்றை WASP-12b கிரகம், 10 நாட்களுக்குள் ஒரு சுற்று சுற்றிவரும்.
 
சூடான வியாழன் கிரகத்தைப் போன்றே இந்தக் கிரகம் இருக்கிறதாம்...
 
WASP-12b கிரகம் அதிவெப்பமாக இருப்பதால் மேகங்கள் கூட அங்கு உருவாவதில்லை.
 
எளிதில் தீப்பிடிக்கக்கூடிய 'ஹைட்ரோஜன்' வாயு அந்தக் கிரகத்தின் காற்றுமண்டலத்தில் நிலவும். 'ஹைட்ரோஜன்' வாயுவைத் தனது காற்றுமண்டலத்தில் கொண்டுள்ள கிரகம் அரிது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்