Paristamil Navigation Paristamil advert login

சூரியனை விட பெரிய கருந்துளைகள் கண்டுபிடித்த ஜப்பான்!

சூரியனை விட பெரிய கருந்துளைகள் கண்டுபிடித்த ஜப்பான்!

6 புரட்டாசி 2017 புதன் 05:57 | பார்வைகள் : 9124


விண்வெளியில் மாபெரும் புதிய கருந்துளைகள் இருப்பதை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
அண்டசராசரத்தில் சுமார் 100 கருந்துளைகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் சூரியனை விட பல மடங்கு பெரியதாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 
 
ஒரு நட்சத்திரத்தின் ஆயுட்காலம் நிறைவடையும்போது அது தன்னை தானே வெடித்துக்கொள்ளும். இந்நிகழ்வு ’சூப்பர் நோவா’ என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வின்போது ஏற்படும் வெற்றிடமே கருந்துளைகள் என கூறப்படுகிறது. 
 
ஜப்பானில் உள்ள கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் அண்டத்தில் ராட்சத கருந்துளை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
 
இந்த கருந்துளையானது நமது சூரியனை விட ஒரு லட்சம் மடங்கு பெரியதாகும். Sagittarius A எனப் பெயரிடப்பட்ட இந்த கருந்துளை சூரியனை விட 400 மில்லியன் மடங்கு பெரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்