சந்திரனில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் ஜேர்மன்!
11 ஆவணி 2017 வெள்ளி 12:56 | பார்வைகள் : 9441
பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கு இறுதியாக 1971 ஆம் ஆண்டு விண்வெளி வீரர்கள் குழு ஒன்று பயணித்திருந்தது.
அதன் பின்னர் செய்திமதிகளின் ஊடாகவே அங்கிருந்து தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன.
தற்போது செவ்வாய் கிரகத்தின் மீதான ஆராய்ச்சிகள் மும்முரமாகியுள்ள நிலையில் மீண்டும் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பவும் விண்வெளி நிறுவனங்கள் ஆர்வம்காட்டி வருகின்றன.
இதனைக் கருத்தில்கொண்டு சந்திரனில் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத் திட்டத்தினை ஜேர்மனை தளமாகக் கொண்டு செயற்படும் புதிய நிறுவனம் ஒன்று செயற்படுத்தவுள்ளது.
இதேவேளை Google Lunar X திட்டத்தின் ஊடாக சந்திரனிற்கு இரு ரோவர் விண்கலங்களும் அனுப்பப்படவுள்ளது.
இவை இவ் வருடம் டிசம்பர் மாதமளவில் செலுத்தப்படவுள்ளன.