பூமிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக சூடான புதிய கிரகம்!
6 ஆவணி 2017 ஞாயிறு 08:59 | பார்வைகள் : 9380
பூமியிலிருந்து 900 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வியாழன் போன்ற மிகப்பெரிய சூடான கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் பல்வேறு விஞ்ஞான விடயங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வியாழன் போன்றே மிகப்பெரிய சூடான கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது.
இந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் செயற்கைக்கோள் புகைப்படங்களில் தெரிகின்றன.
ஆனால் அந்த நீரானது இரும்பை கொதிக்க வைக்கும் அளவுக்கு திறனுடையது அல்ல எனவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த கிரகத்துக்கு WASP 12B என பெயர் வைக்கப்பட்டுள்ளது, இதை சூடான வியாழன் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.
மிக சூடான கிரகம் என்பதால் அதன் வளிமண்டல அடுக்கிலிருக்கும் நீராவி உருவி பளபளப்புடன் தோற்றம் தர வாய்ப்புள்ளது.
ஆனால் அங்கிருக்கும் நீரானது அங்கே உயிர்கள் வாழ போதுமான அளவில் இல்லை.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிரகத்தின் வளிமண்டல அடுக்குகளின் மீது விழும் ஒளியின் தாக்கத்தை அடிப்படையாக வைத்து மேலும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
இதோடு, ஸ்பெக்ட்ரோகோபி ஆய்வு மூலமாக புதிய கிரகத்தின் வளிமண்டல அடுக்குகளில் வித விதமாக ஒளி அலைகளை பாய்ச்சி அதன் விளைவாக கிரகத்தில் ஏற்படும் மாற்றங்களையும் விஞ்ஞானிகள் உற்று கவனித்து வருகிறார்கள்.