செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தன: உறுதி செய்த நாசா விஞ்ஞானிகள்

2 ஆனி 2017 வெள்ளி 12:21 | பார்வைகள் : 13476
செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரத்தை நாசாவின் கியூரியாசிட்டி கண்டுபிடித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதா என நாசா பல ஆண்டுகளாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது.
இதற்காக கடந்த 2012ம் ஆண்டு நாசா கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தை அனுப்பியது.
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்துவரும் ரோவர் விண்கலம் பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது.
இந்நிலையில் தற்போது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பாறைகளில் நீரோட்டம் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
இதன்மூலம் செவ்வாயில் உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.
எனினும் செவ்வாய் கிரகத்தில் நிலத்தடி நீர் இருக்கிறதா என்பது குறித்து தற்போது எதுவும் கூற இயலாது எனவும் தெரிவித்துள்ளனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025