செவ்வாய் கிரகத்தில் சிலந்திகள்? நாசா தகவல்
15 ஆடி 2018 ஞாயிறு 10:54 | பார்வைகள் : 9525
உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் தொடர்பில் நாசா நிறுவனம் செவ்வாய் கிரகத்தினை நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகின்றது.
இந்நிலையில் அவ்வப்போது உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் போன்ற புகைப்படங்கள் வெளியாகி வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தற்போது அங்கு சிலந்திகள் ஊர்ந்து சென்றதற்கான அடையாளங்கள் காணப்படுவது போன்ற படத்தினை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் செயற்கைக் கோளின் உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்திலேயே இவ்வாறான தோற்றம் தென்பட்டுள்ளது.
எனினும் இப் புகைப்படத்தில் காணப்படம் ஆதாரம் தொடர்பில் நாசா விண்வெளி ஆய்வு மையம் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.