புழுதிப் புயலின் தாக்கத்தினால் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மாற்றம்!
24 ஆனி 2018 ஞாயிறு 11:37 | பார்வைகள் : 8763
கடந்த ஒரு வாரமாக வீசி வருகின்ற தூசு கலந்த புழுதிப் புயலினால் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம்பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல் வீசவுள்ளதாக அண்மையில் அறிவித்த நாசா, இந்தப் புயலை செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வரும் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் படம்பிடிக்கும் எனவும் அந்த புயலினால் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவித்திருந்தது.
கடந்த ஒரு வார காலமாக செவ்வாய் கிரகத்தில் வீசி வரும் புழுதிப் புயலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இதனால் கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் நாசா கூறியுள்ளது.
இந்நிலையில், புழுதிப் புயலின் காரணமாக செவ்வாய் கிரகத்தின் சில பகுதிகளில் நிறம் மாறியுள்ளது. மஞ்சள் நிறமாக இருந்த பகுதிகள் சிவப்பு நிறமாக மாறியுள்ள புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.