ப்ளூட்டோ கிரகத்தில் மீத்தேன் கண்டுபிடிப்பு!
3 ஆனி 2018 ஞாயிறு 12:02 | பார்வைகள் : 8920
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கக்கூடிய சாத்தியம் தொடர்பில் நாசா நிறுவனம் ஆய்வு செய்து வருகின்றது.
அதே தருணத்தில் ப்ளூட்டோ கிரகம் தொடர்பிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் ஐஸ் நிலையில் மீதேன் வாயு ப்ளூட்டோ கிரகத்தில் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமியில் உள்ள பாலைவனங்களைப் போன்றே ப்ளூட்டோவின் மேற்பரப்பு காணப்படும் என முன்னர் நம்பப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே மீத்தேன் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
இவை 200 தொடக்கம் 300 மைக்ரோ மீற்றர்கள் விட்டம் கொண்ட நுண்துணிக்கைகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ப்ளூட்டோவில் செக்கனுக்கு 10 மீற்றர்கள் எனும் வேகத்தில் வீசும் காற்றினால் இத் துணிக்கைகள் இடம்விட்டு இடம் நகர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.