நிலநடுக்கத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அறிமுகம்!
20 வைகாசி 2018 ஞாயிறு 11:39 | பார்வைகள் : 8934
சீனாவை சேர்ந்த நில நடுக்க வல்லுநர்கள் மூன்று வாரங்களுக்கு முன்னரே நில நடுக்கத்தினைக் கண்டறியக்கூடிய முறைமை ஒன்றினை உருவாக்கவுள்ளனர்.
நிலத்தின் கீழாக இம் முறைமை உருவாக்கப்படவுள்ளது.
இவ்வாறான சுமார் 2,000 நிலையங்களை உருவாக்கவுள்ளதாக கடந்த புதன் கிழமை சீன ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளன.
முதன் முறையாக சிச்சுவான் மற்றும் யுனான் மாகாணங்களில் இத் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதற்காக பயன்படுத்தப்படும் விசேட சென்சார்கள் நிலத்தின் கீழாக 4 மைல் ஆழத்திலிருந்து 12 மைல் ஆழம் வரை கடத்தப்படும் சக்திகளை துல்லியமாகக் கண்டறியக்கூடியது.
அத்துடன் 5.0 ரிக்டர் அளவிற்கு மேலான நில நடுக்கத்தினை முற்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
எதிர்வரும் 2019ம் ஆண்டிற்குள் மேற்கண்ட இரு மாகாணங்களிலும் இம் முறைமை உருவாக்கப்பட்டுவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.