Paristamil Navigation Paristamil advert login

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் ஹெலிகாப்ட்டர்

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் ஹெலிகாப்ட்டர்

13 வைகாசி 2018 ஞாயிறு 09:05 | பார்வைகள் : 8728


செவ்வாய் கிரகத்திற்கு சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை வரும் 2020ஆம் ஆண்டில் NASA எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பவுள்ளது.
 
பணித்திட்டம் வெற்றியானால் மற்றுமொரு கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிடும் முதல் முயற்சியாக இது இருக்கும்.
 
இரண்டு கிலோகிராம் எடையைக் கொண்ட அந்த ஹெலிகாப்டர், செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளப் பயன்படும்.
 
பூமியைவிட செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரின் விசிறி பாகங்கள் 10 மடங்கு வேகமாகச் சுழலும்.
 
செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தின் அடிப்படையில் ஹெலிகாப்டரும் அதன் பாகங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
 
கார் அளவு பெரிதாக இருக்கும் விண்கலத்தின் மூலம் ஹெலிகாப்டர், வரும் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிவிடப்படும்.
 
பல மாதங்கள் பயணத்திற்குப் பிறகு 2021 பிப்ரவரி மாதம், செவ்வாய் கிரகத்தைப் போய்ச்சேரும். 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்