ஏலியன்களை சிக்க வைக்க நாசாவின் அதிரடித் திட்டம்!
22 சித்திரை 2018 ஞாயிறு 11:44 | பார்வைகள் : 8832
முன்னைய தலைமுறையினர் இரவு நேரங்களில் வானத்திலுள்ள நட்சத்திரங்களை பார்த்து மகிழ்ந்தனர்.
ஆனால் தற்போதைய தலைமுறையினர் நட்சத்திரங்கள் தொடர்பில் பல கேள்விகளுக்கான விடைகளை கண்டறிந்துள்ளனர்.
இதேபோன்று தற்போது காணப்படும் மற்றுமொரு மர்மமான ஏலியன்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கான மற்றுமொரு முயற்சியாக நாசா நிறுவனம் சக்திவாய்ந்த தொலைகாட்டியினைக் கொண்ட செயற்கைக்கோள் ஒன்றினை விண்ணுக்கு அனுப்புகின்றது.
ஏலியன்கள் வாழும் கிரகங்களை கண்டறியும் நோக்கிலேயே இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
TESS எனப்படும் திட்டத்தின் ஊடாக சுமார் 200,000 வரையான மிகவும் பிரகாசமான நட்சத்திரங்களையும், அவற்றிற்கான கிரகங்களையும் அவதானிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காகவே சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் James Webb Space Telescope (JWST) எனும் தொலைகாட்டியைக் கொண்ட செயற்கைக் கோள் 2020ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது.