Paristamil Navigation Paristamil advert login

விண்கற்களை தகர்க்க நாசாவின் அதிரடி திட்டம்..!

விண்கற்களை தகர்க்க நாசாவின் அதிரடி திட்டம்..!

26 பங்குனி 2018 திங்கள் 11:19 | பார்வைகள் : 8861


விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி பாரிய விண்கற்கள் வருகின்றமை சம காலத்தில் அடிக்கடி நிகழ்கின்றது.
 
இவ் விண்கற்கள் பூமியில் மோதும்போது பாரிய இழப்புக்கள் ஏற்படும் சாத்தியம் இருப்பதனால் பூமியை அடைய முன்னரே அவற்றினை அழிக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.
 
இச் செயற்பாட்டிற்கு புதிய வழிமுறை ஒன்றினை நாசா நிறுவனம் முன்மொழிந்துள்ளது.
 
அதாவது அணுசக்தியை பயன்படுத்தி விண்கற்களை தாக்கி அழிக்கும் ஆயுதம் ஒன்றினை உருவாக்கவுள்ளனர்.
 
ஹமர் என அழைக்கப்படும் குறித்த ஆயுதத்தினை National Nuclear Security Administration அமைப்புடன் இணைந்து நாசா நிறுவனம் உருவாக்கவுள்ளது.
 
சுமார் 30 அடிகள் நீளமான குறித்த ஆயுதம் அணுகுண்டினை தாங்கிச் செல்லக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்