Paristamil Navigation Paristamil advert login

வியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா?

வியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா?

27 மாசி 2018 செவ்வாய் 16:39 | பார்வைகள் : 9537


வியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரினங்கள் வாழ முடியும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 
பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ பல்கலைக்கழக நிபுணர்கள், சமீபத்தில் வியாழன் கிரகம் குறித்த ஆய்வினை மேற்கொண்டனர்.
 
இந்த ஆய்வில், வியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பா குறித்து சேகரிக்கப்பட்ட தகவல்கள், பூமியுடன் ஒத்துப்போவதை கண்டறிந்தனர்.
 
அதாவது யூரோப்பாவின் நிலமேற்பரப்பில், ஐஸ்படுகையின் 10 கிலோ மீட்டர் ஆழத்தில், கடல் போன்ற தண்ணீர் மறைந்துள்ளது. இதனால், அங்கு உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
மேலும், யூரோப்பாவின் இந்த அமைப்பானது, தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் அருகே, போங்யங் தங்க சுரங்கத்தின் 2.8 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள மாற்றங்களுடன் ஒத்துப்போகிறது.
 
சூரிய ஒளிபடாத அங்கு, தண்ணீரில் பாக்டீரியாக்கள் உயிர் வாழ்வதும், கதிரியக்கங்கள் ஏற்படுவதும் தெரிய வந்தது.
 
யூரோப்பாவிலும் இந்த தன்மை உள்ளதால், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளதற்கு, சாத்தியக் கூறுகள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்