சூரியனில் ஏற்பட்டுள்ள மாற்றம்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
14 மாசி 2018 புதன் 07:11 | பார்வைகள் : 9071
அடுத்த 30 ஆண்டுகளில் சூரியனின் வெப்பம் குறைந்து அதனால் மினி ஐஸ் ஏஜ் உருவாகலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக சூரியனில் இருந்து வரும் வெப்பக் கதிர்வீச்சால் அதிகரித்துவரும் பூமியின் வெப்பநிலை காரணமாக துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
கடந்த 2015, 2016, 2017 ஆகிய 3 ஆண்டுகள் தொடர்ந்து அதிகம் வெப்பம் பதிவான ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அடுத்த 30 ஆண்டுகளில் வெப்பம் கணிசமாக குறைந்துவிடும் என கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி 2050-ம் ஆண்டுக்குள் சூரியனின் வெப்பநிலை குறைந்து அதன் வெளிச்சம் மங்கி காட்சியளிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரியனின் 11 ஆண்டுகள் சுழற்சி முறையை கண்காணித்த விஞ்ஞானிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனால் 2050-ம் ஆண்டுக்குள் சூரியன் அசாதாரணமாக குளிர்ச்சி அடையும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
17-ம் நூற்றாண்டில் இதுபோல் சூரியன் குளிர்ந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற காலகட்டத்தில் தான் பால்டிக் கடல் உறைந்தது என்றும் அப்போது பால்டிக் கடற்பரப்பின் மீது சுவீடன் படைகள் அணிவகுத்துச் சென்று 1658ம் ஆண்டு டென்மார்க்கின் மீது படையெடுத்ததாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.