பூமிக்கு அருகில் கடந்து செல்லவுள்ள விண்கல்..!!
9 மாசி 2018 வெள்ளி 08:35 | பார்வைகள் : 9104
நாசா நிறுவனம் மற்றுமொரு விண்கல்லினை அடையாளம் கண்டுள்ளது.
இவ் விண்கல்லானது பூமிக்கு மிகவும் அண்மித்த நிலையில் கடந்த செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாளைய தினம் பூமியை கடந்து செல்லவுள்ள இவ் விண்கல்லினால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது எனவும் நாசா குறிப்பிட்டுள்ளது.
15 மீற்றர்கள் தொடக்கம் 30 மீற்றர்கள் வரை பருமனுள்ள குறித்த விண்கல் ஆனது பூமியிலிருந்து 184,000 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் கடந்து செல்லவுள்ளது.
இந்திய நேரப்படி அதிகாலை நான்கு மணியளவில் குறித்த விண்கல் பூமியைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.