Paristamil Navigation Paristamil advert login

மின்னல் பற்றி இதுவரை அறியாத தகவல்கள்?

மின்னல் பற்றி இதுவரை அறியாத தகவல்கள்?

30 தை 2018 செவ்வாய் 05:18 | பார்வைகள் : 8837


சிங்கப்பூரில் இம்மாத முதற்பகுதியில் நிலவும் மழைப்பருவத்தால் வெப்பநிலை 23 டிகிரி முதல் 24 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.
 
மழைக் காலத்தில் இடியும், மின்னலும் சேர்ந்தே வருகின்றன.
 
மின்னல் குறித்த சில தகவல்கள்:
 
1. சிங்கப்பூரில் ஆண்டுக்கு 11,500 முறை மின்னல் வெட்டுகிறது.
 
ஆண்டுதோறும் இங்கு 168 முறை இடியுடன் கூடிய மழை பெய்வது அதற்குக் காரணம்.
 
2. கடந்த ஆண்டு நவம்பரில் MRT ரயிலை மின்னல் தாக்கியது.
 
3. ஆண்டுக்குச் சுமார் 20 பேர் மின்னலால் தாக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
4. சிங்கப்பூரின் வடக்கு, மேற்கு பகுதிகளில் மின்னல் அதிகமாக ஏற்படுவதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றனர்.
 
5. ஒவ்வொரு மின்னல் வீச்சிலும் 1 பில்லியனுக்கும் அதிகமான வோல்ட் மின்சாரம் உள்ளது.
 
6. 60 வாட் மின்விளக்கை ஆறு மாதங்களுக்கு இயக்கும் சக்தி அதில் உள்ளது.
 
7. இந்தியாவில் ஆண்டுக்குக் குறைந்தது 2,000 பேர் மாண்டுபோகின்றனர்.
 
8. ஆயினும், தாக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் உயிர்பிழைப்பதாய் மருத்துவ அதிகாரிகள் கூறப்படுகின்றனர்.
 
மின்னல் தாக்கிய ஓரிடத்தில் மீண்டும் தாக்குதல் ஏற்படக்கூடும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்