Paristamil Navigation Paristamil advert login

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பனிப்பாறை படிவங்கள்!

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பனிப்பாறை படிவங்கள்!

14 தை 2018 ஞாயிறு 10:00 | பார்வைகள் : 8760


செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் பனிப்பாறை படிவங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று விண்வெளி ஆய்வு விஞ்ஞானி ஷேன் பைரன் தெரிவித்துள்ளார்.
 
செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ‘கியூரியாசிட்டி’ என்ற விண்கலம் அங்கு முகாமிட்டு செவ்வாய் கிரகத்தின் நில அமைப்பு, சுற்றுச் சூழல், தட்பவெப்ப நிலை குறித்த தகவல்களை புகைப்படம் மூலம் அனுப்பி வருகிறது.
 
இந்த நிலையில் அங்கு தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாக செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பில் பனிப்பாறை படிவங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
நிலப்பரப்பில் இருந்து 100 மீட்டர் வரை அவை படர்ந்து கிடக்கின்றன. இது போன்ற பனிப்பாறைகள் அங்கு 8 இடங்களில் இருப்பதாக அரிசோனா பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வு விஞ்ஞானி ஷேன் பைரன் தெரிவித்துள்ளார்.
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்