காமா கதிர்களை வெளிவிடும் நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு
26 மார்கழி 2016 திங்கள் 18:49 | பார்வைகள் : 9491
அண்ட வெளியில் உள்ள பால் வீதியிலிருக்கும் நட்சத்திரக் கூட்டம் ஒன்று காமா கதிர்களை வெளியிடுவதை முதன் முறையாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை நாசாவின் Fermi Gamma-Ray எனும் விண்வெளி தொலைகாட்டியின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானிகள் குறித்த காமா கதிர்களுக்கு LMC P3 எனப் பெயரிட்டுள்ளனர்.
மேலும் இவை பூமியிலிருந்து 163,000 ஒளியாண்டு தூரத்தில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தவிர இக் காமா கதிர்களில் இருந்து 0.1 தொடக்கம் 100 ஜிகாஎலக்ட்ரோன் வோல்ற் சக்தி பிறப்பிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.