Paristamil Navigation Paristamil advert login

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற கற்றாழை

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற கற்றாழை

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9075


 பணம் செலவழிக்காமல் சருமத்தை அழகாக்க உதவும் பொருட்களில் ஒன்று தான் கற்றாழை. மேலும் இந்த கற்றாழையானது அனைத்துவிதமான சருமத்தினருக்கும் மிகவும் நல்லது. 

 
அதுமட்டுமின்றி, இந்த கற்றாழை ஃபேஸ் பேக்கை அன்றாடம் போட்டு வந்தால், சருமத்தின் பொலிவு நிச்சயம் அதிகரிக்கும். சரி இப்போது சரும பிரச்சனைக்கு கற்றாழையைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்று பார்க்கலாம்.
 
• சருமத்தில் உள்ள கருமையைப் போக்க கற்றாழை ஜெல்லில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையை விரைவில் போக்கலாம். 
 
• கற்றாழை ஜெல்லுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் சிறிது நேரம் மசாஜ் செய்து நீரில் கழுவினால், கரும்புள்ளிகள் மற்றும் பருக்களால் வந்த வடுக்கள் நீக்கிவிடு 
 
• சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கற்றாழை ஜெல்லுடன், சிறிது வெள்ளரிக்காய் ஜூஸ், தயிர் மற்றும் ரோஸ் எண்ணெய் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், கிருமிகள் வெளியேறுவதுடன், சரும அரிப்புக்கள் ஏற்படாமல் இருக்கும். 
 
• வறட்சியான சருமத்தை கொண்டவர்கள் கற்றாழை ஜெல்லில், பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து பேஸ்ட் செய்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்