Paristamil Navigation Paristamil advert login

2 ஆண்டுகள் காணாமல் போன விண்கலத்துடன் நாசா தொடர்பு

2 ஆண்டுகள் காணாமல் போன விண்கலத்துடன் நாசா தொடர்பு

25 ஆவணி 2016 வியாழன் 23:58 | பார்வைகள் : 9261


 நீண்ட காலம் தொடர்பை இழந்திருந்த நாசாவின் விண்கலம் ஒன்று சுமார் இரண்டு ஆண்களின் பின் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சூரிய கண்காணிப்பு விண்கலமான ஸ்டீரியோபி விண்கலம் 2014, ஒக்டோபர் முதலாம் திகதி காணாமல்போனது. அதன் செயல்முறையில் ஏற்பட்ட கோளாறை அடுத்து தொடர்பை இழந்தது.
 
இந்நிலையில் இந்த விண்கலத்துடன் தொடர்பை ஏற்படுத்த விஞ்ஞானிகள் கடந்த 22 மாதங்களாக முயன்று வந்தனர். 2006 ஆம் ஆண்டிலேயே ஸ்டீரியோ பி விண்கலம் ஏவப்பட்டது.
 
பூமியில் இருந்து சூரியனின் முன் மற்றும் பின் பக்கங்களை பிரத்தியேகமாக படம் பிடிப்பதே ஸ்டீரியோ பி விண்கலத்தின் முக்கிய இலக்காகும். இதனுடன் ஸ்டீரியோ ஏ என்ற மற்றைய விண்கலம் ஏக காலத்தில் செயற்பட்டு வருகிறது. இந்நிலையில் நாசா தனது விண்வெளி தொலைத்தொடர்பு வலையமைப்பை பயன்படுத்தி ஸ்டீரியோ பி விண்கலத்துடன் தொடர்பை ஏற்படுத்த முயன்றபோது கடந்த ஞாயிறன்று விண்கலத்திடம் இருந்து சமிக்ஞை கிடைத்துள்ளது.
 
ஸ்டீரியோ பி வண்கலத்தின் தற்போதைய நிலை குறித்து கண்டறியும் முயற்சியில் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் குழுவினர் ஈடுபட்டு வருவதாக நாசா குறிப்பிட்டுள்ளது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்