Paristamil Navigation Paristamil advert login

ஜூபிட்டரின் தலையில் ஔிக்கிரீடம்

ஜூபிட்டரின் தலையில் ஔிக்கிரீடம்

1 ஆடி 2016 வெள்ளி 12:27 | பார்வைகள் : 13438


 அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் வெளியிடப்பட்டுள்ள ஜூபிட்டர் (வியாழன்) கிரகத்தின் புகைப்படத்தில் அதன் தலையில் ஔிக்கிரீடம் இருப்பது போன்று தென்படுகிறது.

 
ஹபிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படத்தில் ஜூபிடரின் துருவங்களில் காணப்படும் அரோரா என்ற ஒளிக்கோவை அழகாகத் தெரிகிறது.
 
சிறிய துகள்கள் விண்வெளியில் பறக்கும்போது அவை ஜூபிடர் கிரகத்தின் காந்தப் புலத்தால் பிடிக்கப்பட்டு கிரகத்தின் வட அல்லது தென் துருவத்திற்குத் தள்ளப்படும்போது இவ்வாறான ஔிக்கோவைகள் தோன்றுகின்றன.
 
சூரிய குடும்பத்தில் மிகப்பெரியதான ஜூபிடர், பூமியை விட ஆயிரம் மடங்குக்கும் அதிகக் கொள்ளளவு கொண்டது.
 
சூரியனிடமிருந்து ஐந்தாவது வளையத்தில் இருக்கும் ஜூபிடரில் திடமான மேற்பரப்பு இல்லாமல், பிரதானமாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களையே கொண்டிருப்பதால் இது வாயுக்கிரகம் என்று அழைக்கப்படுகிறது.
 
திரவ நிலையில் உள்ள உலோகத்தன்மை வாய்ந்த ஹைட்ரஜன் இந்தக் கிரகத்தில் இருப்பதாகவும் இந்த ஹைட்ரஜன் தான் ஜூபிடரின் தீவிரமான காந்தப் புலத்தை உருவாக்குவதாகவும் கருதப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்