கருந்துளையின் திணிவு இவ்வளவா?
10 வைகாசி 2016 செவ்வாய் 20:48 | பார்வைகள் : 9960
கருந்துளையானது பொதுவாக நட்சத்திர துகள்களின் மத்தியில் அமைந்திருக்கும். இதன் உட்புறம் வாயுக்கள் கொண்ட வெளி காணப்படும்.
அண்மையில் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழுவொன்று தங்களால் 73 மில்லியன் ஒளியாண்டு தொலைவினில் உள்ள கருந்துளையின் திணிவை அளவிட முடிந்ததாக கூறுகின்றனர்.
இக் கருந்துளையின் திணிவு ஏறத்தாழ சூரியனின் திணிவிலும் 660 மில்லியன் மடங்கு பெரியது. இதன் உட்புறத்தில் மணிக்கு 1.8 கிலோமீட்டர் வேகத்தில் வாயுக்கள் சுழன்ற வண்ணம் உள்ளது.
இவ்வேகமானது ALMA கருவியின் மூலமே அளவிடப்பட்டது, ஏனெனில் அதன் வேவகத்தை துணியக்கூடியவாறு எந்த ஒளிக்கதிர்களும் அதிலிருந்து வெளிப்படவில்லை.
ஆனாலும் ALMA கருவியால் அளவிடக்கூடிய பளபளப்பான ஒளிர்வை அது காலல் செய்ததாகவும், அதனைக்கொண்டே அதன் வேகம் துணியப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது.
இதுதொடர்பில் கலிபோர்னியா விஞ்ஞானி தங்களால் கருந்துளையின் கவர்ச்சிவிசைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வாயுக்களை நேரடியாக பார்க்க முடிந்ததாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் இத் திணிவு தொடர்பான அறிவானது, ஒரு கருந்துளையின் வளர்ச்சி எத்தகையது என அறிந்துகொள்ள உதவியாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.