Paristamil Navigation Paristamil advert login

மனிதர்கள் வாழக்கூடிய 3 கிரகங்கள் கண்டுபிடிப்பு

மனிதர்கள் வாழக்கூடிய 3 கிரகங்கள் கண்டுபிடிப்பு

3 வைகாசி 2016 செவ்வாய் 11:00 | பார்வைகள் : 9765


 பூமியைப் போன்று மனிதர்கள் வாழக் கூடிய 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

 
விண்வெளியில் காணப்படும் நட்சத்திரக் கூட்டங்களை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், அவ்வப்போது புதிய கிரகங்களை கண்டுபிடித்து அதுபற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், பூமியைப் போன்று மனிதர்கள் வாழக் கூடிய 3 புதிய கிரகங்களை கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. 
 
நமது சூரிய குடும்பத்துக்கு வெளியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோள்களிலேயே இந்த 3 கோள்கள் தான் மிகச் சிறந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தக் கிரகங்கள் 39 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளதாகவும் இவை அளவிலும் வெப்ப நிலையிலும் பூமி மற்றும் வெள்ளி போன்று உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 
 
சூரிய குடும்பத்துக்கு வெளியே உயிர்வாழ்வதற்கான இரசாயன தடயங்களை கண்டுபிடிக்க இது முதல் வாய்ப்பு என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.  
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்