Paristamil Navigation Paristamil advert login

வானில் செயற்கை நட்சத்திரத்தை தோற்றுவித்த வானியலாளர்கள்

வானில் செயற்கை நட்சத்திரத்தை தோற்றுவித்த வானியலாளர்கள்

1 வைகாசி 2016 ஞாயிறு 19:45 | பார்வைகள் : 11430


 ஆராய்ச்சி என்பது இன்று அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து வருகின்றது.

 
இதற்கு வானியல் துறையும் விதி விலக்கு அல்ல. அண்டவெளியில் காணப்படும் பல்வேறு வான்பொருட்கள் பற்றியும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகின்றது.
 
இவ்வாறான நிலையில் வானியலாளர்கள் லேசர் கதிர்களை பயன்படுத்தி செயற்கையான முறையில் அதி சக்தி வாய்ந்த நட்சத்திரத்தினை உருவாக்கியுள்ளனர்.
 
 
இச் செயற்கை நட்சத்திரத்தை மையமாகக் கொண்டு ஆராய்ச்சிகளை இலகுபடுத்துவதற்காக European Southern Observatory’s (ESO) வானியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 
இதனை உருவாக்குதற்காக Four Laser Guide Star Facility (4LGSF) எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
அதாவது குறித்த நட்சத்திரத்தினை 4 லேசர் கதிர்கள் இணைந்து உருவாக்கியுள்ளதுடன், இவை ஒவ்வொன்றும் 11.8 அங்குல விட்டம் உடையதுடன், 22 வாட்ஸ் உடையனவாகவும் காணப்படுகின்றன.