நட்சத்திர வெடிப்புகளால் பூமியில் கதிரியக்க பாதிப்பு
9 சித்திரை 2016 சனி 00:49 | பார்வைகள் : 9760
சுப்பர் நோவா என்று அழைக்கப்படும் வெடித்துச் சிதறும் நட்சத்திரங்களால் கடந்த சில மில்லியன் ஆண்டுகளில் பூமியில் கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை இரண்டு ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
உலகெங்கும் கடலுக்கடியில் அயன்- - 60 கதிர்வீச்சு புதையுண்டு இருப்பதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஓர் ஆய்வு குறிப்பிட்டுள்ளது. 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் பாதி அளவான உயிர்களை அழித்ததாக நம்பப்படும் அயன்- - 60 கதிரியக்கம் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றும்போது ஏற்பட்டு நீண்ட காலத்திற்கு முன்னரே காணாமல்போயிருக்க வேண்டும்.
இந்த கதிரியக்கத் தடயம் இன்றும் பூமியில் கண்டறியப்பட்டதன் மூலம் அது அண்மைய நிகழ்வுகளால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சுப்பர் நோவா நிகழ்வுகளால் பூமியில் கதிர்வீச்சு தாக்கம் ஏற்பட்டது குறித்த மாதிரி ஒன்றை மற்றொரு ஆய்வு வெளியிட்டுள்ளது. இந்த இரு ஆய்வு முடிவுகளும் ஜேர்னல் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது.
சுமார் 300 ஒளியாண்டுகள் தொலைவில் 13 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பாரிய நட்சத்திர வெடிப்புகளே பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக கணிக்கப்படுகிறது.