Paristamil Navigation Paristamil advert login

மிகவும் தனிமையான கோள் கண்டுபிடிப்பு!

மிகவும் தனிமையான கோள் கண்டுபிடிப்பு!

7 சித்திரை 2016 வியாழன் 14:07 | பார்வைகள் : 10495


 விண்வெளியில் வெறுமையான பிராந்தியமொன்றில் காணப்பட்ட இளம் கோள் ஒன்றை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 
2MASS J1119–1137 என அழைக்கப்படும் இந்தக் கோள் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
பூமியிலிருந்து சுமார் 95 ஔியாண்டுகள் தொலைவில் காணப்பட்ட அந்தக் கோள் எமது வியாழக்கிரகத்தை விடவும் 8 மடங்கு தி.ணிவைக் கொண்டதாகும்.
 
கோள்கள் நட்சத்திரமொன்றை சுற்றி வருவதே வழமையாகவுள்ள நிலையில் இந்தக் கோள் தனக்கென நட்சத்திரமொன்றையும் கொண்டிராது தனித்துக் காணப்படுகின்றமை விண்வெளி ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்