விண்ணில் ஏவிய ஜப்பான் செயற்கைகோள் மாயம்
30 பங்குனி 2016 புதன் 20:24 | பார்வைகள் : 10306
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் பெரும் பொருட் செலவில் தயாரிக்கபட்ட ஹிட்டோமி என்ற செயற்கைக்கோள் ஒன்று விண்ணில் ஏவப்பட்டது.
கருந்துளை மற்றும் விண்வெளி மர்மங்களை ஆராய்வதற்காக கடந்த மாதம் உயரிய தொழில்நுட்பத்துடன் இந்த செயற்கைக்கோள் ஏவபட்டது.
இந்த செயற்கைக்கோளிடமிருந்து வந்துகொண்டிருந்த தகவல்கள் திடீர் என நின்று போனது. செயற்கை கோள் என்ன ஆனது என தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அமெரிக்க கூட்டு விண்வெளி செயல்பாட்டு மையம் ஜப்பானின் செயற்கைகோளின் 5 உடைந்த பாகங்களை கண்டறிந்ததாக கூறியது
உடைந்த செயற்கைக்கோள் பாகங்களை ஆராய்ந்துவரும் அமெரிக்க ஏஜென்சி அளித்திருக்கும் தகவல்களை தற்போது ஆய்வு செய்து வருவதாக ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி தெரிவித்திருக்கிறது.
கருந்துளையிலிருந்தும் பிரபஞ்ச வெளியிலிருந்தும் வெளியாகும் எக்ஸ் - ரே கதிர்களை ஆராய்வதற்கான இந்தத் திட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா ஆகியவற்றின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் இணைந்துள்ளன.