எப்போது முடி நரைக்க தொடங்கும்?
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9296
35 வயதுக்கு பின்னர் இயல்பாகவே முடிகள் நரைக்க தொடங்கும். சிலருக்கு டீன்ஏஜ் பருவத்திலேயே நரைமுடிகள் தென் படலாம். அதற்கு மரபு வழி கோளாறுகள் காரணமாக இருக்கலாம்.
சத்துக்குறைவு, கவலை, தீராத வேதனை, அதிர்ச்சி, மனஅழுத்தம், நரைத்தல் பற்றிய தீவிர சிந்தனை போன்ற காரணங்கள் நரைகள் தோன்றுவதுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
நரைத்த முடிகளே ஒருவருக்கு வாழக்கையில் அதிக வேதனையை தரலாம். நரை விழுவதை தடுக்க முடியாது. சத்துமிக்க பழங்கள், காய்கறிகள், புரதங்களை உண்பதன் மூலம் நரையை ஒரளவு கட்டுப்படுத்தலாம்.
மிருதுவான ஷாம்புகளை முறையாக தலையில் மசாஜ் செய்து குளிப்பதாலும் நரைகள் சீக்கிரம் விழுவதை தடுக்கலாம்.