Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச விண்வெளி மையத்தை வட்டமிடும் மர்ம பொருள்

சர்வதேச விண்வெளி மையத்தை வட்டமிடும் மர்ம பொருள்

15 பங்குனி 2016 செவ்வாய் 17:22 | பார்வைகள் : 10004


 பூமியிலிருந்து 418 கி.மீ. உயரத்தில், 100 பில்லியன் டொலர் மதிப்பில், மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு, அதில் விண்வெளி ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.

 
அதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து அந்த பணிகளை செய்து வருகின்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தின் அருகே சமீபத்தில் வட்டமிடும் உருளை வடிவிலான பறக்கும் தட்டு ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
 
நாசா வெளியிட்டுள்ள இந்த பதிவில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் அதே வேகத்தில் உருளை வடிவிலான அந்த பறக்கும் தட்டும் பயணிக்கின்றது.பறக்கும் தட்டு குறித்து தொடர் ஆய்வுகளை நடத்தி வரும் ஸ்காட் வாரிங் இதுகுறித்து தமது வலைத்தள பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.
 
சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர் நேரலை நடத்தி வரும் நாசா, பறக்கும் தட்டு தென்பட்டதும் நேரலையை துண்டித்ததாக கூறப்படுகிறது. ஆண்டு துவக்கத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தின் அருகே விசித்திரமான ஒரு பொருள் வட்டமிட்டதாக ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்