விண்வெளிக்கு ரோபோக்களை அனுப்பும் புதிய புரட்சி!
1 பங்குனி 2016 செவ்வாய் 18:54 | பார்வைகள் : 10219
இதுவரை காலமும் விண்வெளி ஆராய்ச்சிகளுக்காக, விண்வெளி ஓடங்களில் நாய், குரங்கு, எலி என்பனவும் பின்னர் மனிதர்களும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அதன் மூலம் விஞ்ஞானிகள் எண்ணில் அடங்காத அளவு புதிய விடயங்களை கண்டுபிடித்தனர்.
விண்வெளி ஆராய்ச்சியில் முதன் முறையாக விண்கலத்தை அனுப்பி புதிய புரட்சியினை மேற்கொண்டிருந்தது ரஷ்யா. இந் நிலையில், தற்போது ரஷ்யா மற்றுமொரு விண்வெளிப் புரட்சியினை நடாத்துவதற்கு புதிய திட்டங்களை தயார்படுத்தி வருகின்றது.
தற்பொழுது மேற்கொள்ளப்படும் விண்வெளி ஆராய்ச்சியில் மனிதர்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, எதிர்காலத்தில் மனித உருக்களைக் கொண்ட ரோபோக்களை அனுப்ப ரஷ்யா முயற்சித்து வருகின்றது.
இந்த ரோபோக்களை விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி, பின்னர் அங்கிருந்து தேவைகளுக்கு ஏற்ப அவற்றினை பயன்படுத்துவதற்கான சோதனைகளை தமது விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.