மூன்றே நாளில் செவ்வாய் கிரகத்தை சென்றடைய முயற்சி!
24 மாசி 2016 புதன் 21:01 | பார்வைகள் : 10072
விண்வெளியில் காணப்படும் போட்டோன்ஸ் எனப்படும் ஒளிக்கதிர்களை ஊடுருவி அதிகவேகத்தில் பாய்ந்துச் செல்லக்கூடிய போட்டோனிக் ப்ரொபுல்ஷன் (photonic propulsion) என்ற புதியவகை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மூன்றே நாளில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விண்வெளியில் காணப்படும் போட்டோன் கதிர்களை எதிர்கொள்ளும் வகையில் லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய எதிர்ப்பு ஒளியலைகளை ஆராய்ச்சியாளர்கள் செயற்கையாக உருவாக்கியுள்ளனர். அந்த தொழில்நுட்பத்துடன் செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் விண்வெளி ஓடங்களை தயாரிப்பதன்மூலம் பூமியில் இருந்து மூன்றே நாளில் செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் இந்த ஆராய்ச்சியில் அவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.