வேற்றுக் கிரக வாயுக்கள் குறித்து முதல்முறை அளவீடு
18 மாசி 2016 வியாழன் 08:06 | பார்வைகள் : 10336
வேற்று நட்சத்திரம் ஒன்றை வலம் வரும் ‘சுப்பர் ஏர்த்’ கிரகம் ஒன்றில் இருக்கும் வாயுக்கள் தொடர்பில் வானியலாளர்கள் முதல் முறை நேரடி அளவீட்டை மேற்கொண்டுள்ளனர்.
வேற்று கிரகத்தின் வளிமண்டலத்தில் ஐதரசன் மற்றும் ஹீலியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட போதும் அங்கு நீர் இருக்கவில்லை.
55 கன்க்ரி ஈ, என்று அழைக்கப்படும் உலகம் பூமியை விடவும் இரு மடங்க பெரிது என்பதோடு, எட்டு மடங்கு நிறைகொண்டதாகும். எனினும் அசாதாரணமான முறையில் தனது நட்சத்திரத்தை நெருங்கி வலம் வரும் இந்த கிரகத்தில் ஓர் ஆண்டு என்பது 18 மணி நேரம் கொண்டதாக இருப்பதோடு இங்கு வெப்பநிலை 2,000 செல்சியஸுக்கு அதிகமாகும்.
இந்த கிரகம் பூமியில் இருந்த 40 ஒளியாண்டு தொலைவில் உள்ளது.
பிரிட்டன் நாட்டு ஆய்வுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முடிவு அஸ்ட்ரோபிசிகல் சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பூமியை விட அதிக நிறை கொண்டதும் ஆனால் வியாழன், சனி போன்ற இராட்சத கிரகம் இல்லாததுமாக வேற்று உலகங்களே சுப்பர் ஏர்த் என அழைக்கப்படுகிறது.