Paristamil Navigation Paristamil advert login

விண் கல் பூமியின் தரைப்பரப்பில் விழுந்தால் வெப்பநிலை 8°C ஆல் குறையும்

விண் கல் பூமியின் தரைப்பரப்பில் விழுந்தால் வெப்பநிலை 8°C ஆல் குறையும்

10 மாசி 2016 புதன் 20:50 | பார்வைகள் : 9716


 பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் விண் கல் அடுத்த மாதம் பூமியின் மேல் விழுந்தால் பூமியின் வெப்பநிலை 8° செல்சியஸ் ஆல் குறைவடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 
அடுத்த மாதம் 28 ஆம் திகதி பூமியை தாக்குமென எதிர்பார்க்கப்படும் இந்த விண் கல் பூமியின் மேல் விழுந்தால் பூமியின் வெப்பம் உறை நிலைக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
விண்வெளியில் பல லட்சக் கணக்கான கற்கள் சஞ்சரித்து உலாவருகிறது. இதில் பூமிக்கு அருகாமையில் சஞ்சரிக்கும் சுமார் 12,000 விண் கற்களை , நாசா விண்வெளி நிலையம் அவதானித்து வருகிறது. குறித்த இந்த விண் கல் சுமார் 1 கிலோ மீட்டர் அகலம் கொண்டது என்றும் இது பூமியை தாக்க மிகவும் அரிய சந்தர்ப்பமே உள்ளது என்றும் கூறப்படுகின்றது.
 
ஆனால் அது கடலில் விழுவதற்கு பதிலாக பூமியின் தரையில் மோதினால் அதில் இருந்து உண்டாகும் புகை மண்டலம் 10 ஆண்டுகளாக வளிமண்டலத்தில் இருக்கும் என்றும் தூசித் துகள்கள் அடங்கி மீண்டும் பூமியில் வாழ 6 ஆகலாம் என்றும் கூறப்படுகின்றது.
 
மேலும் குறித்த தூசித் துகள்கள் பூமியின் மேற்பரப்பில் மோதி சூரிய ஒளியின் அளவை குறைத்து விடும் என்றும் வளிமண்டலத்தில் ஓசோன் படலமும் 55 சதவீதம் குறைந்துவிடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்