மூக்கில் வரும் கரும்புள்ளியை போக்க வழிகள்
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9230
சருமத்தின் மென்மையைத் தடுக்கும் கரும்புள்ளி பிரச்சனையை தடுக்க சமையலறையிலேயே நிறைய பொருட்கள் உள்ளன.
• தேனை லேசாக சூடேற்றி, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து, பின் அதனை மூக்கின் மேல் தடவி லேசாக மசாஜ் செய்து, முகத்தை கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கும்.
• தக்காளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து, பின் கழுவி துணியால் துடைத்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் போய்விடும்.
• அனைத்தையும் விட ஆவிப்பிடிப்பது தான் மிகவும் சிறப்பான வழி. அதிலும் சுடுநீரில் மூலிகைகளான லாவெண்டர், எலுமிச்சை தோல் மற்றும் புதினா இலைகள் ஆகியவற்றை சேர்த்து, ஆவிப்பிடித்து சுத்தமான துணியால் முகத்தை துடைத்தால், முகம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன், கரும்புள்ளிகளும் விரைவில் மறையும்.
• சருமத்துளைகளின் அடைப்பால் ஏற்படும் கரும்புள்ளியை, எலுமிச்சை கொண்டு போக்கலாம். அதற்கு எலுமிச்சையை மூக்கின் மேல் தேய்த்தால், சருமத்துளைகளானது திறந்து, கரும்புள்ளிகள் வருவது தடுக்கப்படும்.
• கருப்பு நிற காராமணியை பொடி செய்து, பின் அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, மூக்கின் மேல் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவ வேண்டும். இதனாலும் கரும்புள்ளிகளைப் போக்கலாம்