விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்ட அமெரிக்காவின் உளவு செயற்கைகோள்!
3 வைகாசி 2017 புதன் 13:11 | பார்வைகள் : 8985
SpaceX நிறுவனத்தின் ராக்கெட் மூலம் அமெரிக்கா உளவு செயற்கைகோளை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது.
அமெரிக்க ராணுவம் NROL-76 என்னும் உளவு செயற்கைகோளை தயாரித்துள்ளது.
இந்த செயற்கைகோளை SpaceX நிறுவனத்துக்கு சொந்தமான பால்கன் 9 என்ற ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதன்படி இரு தினங்களுக்கு முன்னர் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து NROL-76 செயற்கை கோள் அனுப்பப்பட்டது.
அதை தொடர்ந்து செயற்கை கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டவுடன் 10 நிமிடத்தில் பால்கன் 9 ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பி வந்து பத்திரமாக தரை இறங்கியது
இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்த SpaceX நிறுவனர், இது தங்களது நிறுவனத்துக்கு நல்ல தருணம் என கூறியுள்ளார்.
தனியார் நிறுவன ராக்கெட் மூலம் அமெரிக்கா முதல் முறையாக தற்போது தான் செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.