பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கான புதிய கிரகம் கண்டுபிடிப்பு!
21 சித்திரை 2017 வெள்ளி 11:02 | பார்வைகள் : 8992
பூமியைப் போலவே உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக்க புதிய கிரகம் ஒன்றை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரியக் குடும்பத்துக்கு அப்பால் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிவப்பு நிற நட்சத்திரத்தை இந்தக் கிரகம் சுற்றிவருவதாக ஐரோப்பிய வானியல் மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
எல்.எச்.எஸ். 1140பி. சூப்பர் எர்த் என இந்த புதிய கிரகத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கிரகம் உருவாகி இருக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கிரகம் பூமியை விட அதிக விட்டம் கொண்டது என்று கூறும் விஞ்ஞானிகள், 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இதன் மீது வெளிச்சம் விழுவதாகவும் தெரிவித்துள்ளனர்.