Paristamil Navigation Paristamil advert login

சனி கிரகத்தில் ஏலியன்கள் வசிப்பதற்கான சூழல்! உறுதி செய்தது நாசா

சனி கிரகத்தில் ஏலியன்கள் வசிப்பதற்கான சூழல்! உறுதி செய்தது நாசா

15 சித்திரை 2017 சனி 16:49 | பார்வைகள் : 9131


சூரிய மண்டலத்தின் பெரும் கோளான சனியில் ஏலியன்கள் வசிப்பதற்கான சூழல் இருப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
 
குறித்த தகவலை நாசா விஞ்ஞானிகள் அறுதியிட்டு தற்போது கூறவில்லை என்றாலும், சனியின் துணைக் கோள் ஒன்றில் அதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் என தெரிவித்துள்ளனர்.
 
ஆனால், இந்த தகவலானது, குறித்த துணைக் கோள் குறித்து அடுத்தகட்ட ஆய்வில் உறுதிப்படுத்தப்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
சனியின் முக்கிய துணைக்கோளான இன்செலடஸில் மட்டுமே பூமியை போன்ற தட்பவெட்பமும், உயிர் வாழ தகுந்த சூழலும் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 
குறித்த ஆய்வினை நாசாவின் Cassini விண்கலம் தொடர்ந்து 13 ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வுகளின் பலனாக தெரிய வந்துள்ளது. இதுவரையான ஆய்வுகள் அனைத்தும் சீரான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது எனில் இன்செலடஸில் ஏலியன்கல் இருப்பது உறுதி என புவியியலாளர் Jeffrey Seewald தெரிவித்துள்ளார்.
 
Cassini விண்கலம் தான் கடந்த 2005 ஆம் ஆண்டு சனியின் துணைக்கோளான இன்செலடஸில் பனிப்படலம் இருப்பதை முதன் முதலில் வெளிக்கொண்டு வந்தது.
 
இதனையடுத்து அடுத்த 10 ஆண்டுகளில், இன்செலடஸில் 30 முதல் 40 கி.மீ பரப்பளவு கொண்ட பெருங்கடல் ஒன்று உறைந்து போயிருப்பதும் தெரிய வந்தது.
 
சனி மற்றும் வியாழன் கிரகங்களின் பல்வேறு துணைக்கோள்களில் கடல்கள் உறைந்து போயிருப்பது விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது என்றாலும் இன்செலடஸில் மட்டும் உயிர் வாழ்வதற்கான சூழல் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.