Paristamil Navigation Paristamil advert login

பூமிக்கு வெளியில் வாழும் உயிரினங்கள்!

பூமிக்கு வெளியில் வாழும் உயிரினங்கள்!

3 பங்குனி 2017 வெள்ளி 14:40 | பார்வைகள் : 9403


 பூமியைப் போன்று உயிரினங்கள் வாழக்கூடிய கிரகங்கள் பற்றி விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
இதன்போது கிடைக்கும் வெவ்வேறு சான்றுகளை மையமாகக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
இந்நிலையில் செவ்வாய் கிரகம் போன்ற பூமிக்கு வெளியே உள்ள வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ்ந்தமை தொடர்பான ஆய்வுக்கு உதவக்கூடிய மற்றுமொரு சான்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 
அதாவது பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் இருக்கும் வாய்ப்பினை உறுதிப்படத்தக்கூடிய நுண்ணிய படிமம் ஒன்று விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளது.
 
எனினும் பூமியில் நீர் காணப்படுவதனால் செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
 
லண்டன் பல்கலைக்கழக கல்லூரி விஞ்ஞானிகளின் வழிகாட்டலில் இயங்கும் குழு ஒன்றே குறித்த படிமத்தை கண்டுபிடித்துள்ளது.
 
நான்கு பில்லியன் வருடங்கள் பழமை வாய்ந்தாக இருக்கலாம் என நம்பப்படும் இப் படிமமானது கனடாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள மலையில் இருந்து பெறப்பட்டுள்ளது.
 
மேலும் விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளில் இதுவரை கண்டுபிடித்த படிமங்களில் மிகவும் பழமை வாய்ந்த படிமம் இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது.