வியாழனில் நீர் இருப்பதாற்கான சாத்தியங்கள்: நாசா
13 மார்கழி 2013 வெள்ளி 10:58 | பார்வைகள் : 10492
வியாழ கிரகத்தின் துணை கிரகமான யுரோப்பாவில் இருந்து விண்வெளியில் நீர் கசியவிடப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஹப்ல் விண்வெளி தொலைநோக்கியின் ஊடாக இந்த துணைக் கிரகத்தை அவதானித்து வெளியிடப்பட்டுள்ள நிழற்படங்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள நாசாவின் கிரகங்கள் தொடர்பான புகழ்பெற்ற விஞ்ஞானி, கலாநிதி ஜேம்ஸ் கிரீன், தற்போது யுரோபா என்ற துணைக்கிரகம், விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு பொருளாக மாறி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த கிரகத்தில் இருந்து நீர் வெளியேற்றப்படுவது உண்மை என்றால், வெளிகிரகங்களில் உள்ள உயரினங்கள் குறித்து ஆய்வுக்கு, இந்த கிரகமே தளமாக பயன்படுத்தப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.