Paristamil Navigation Paristamil advert login

25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியை தாக்கிய அமில மழை: கொடிய உயிரினங்கள் அழிவு

25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியை தாக்கிய அமில மழை: கொடிய உயிரினங்கள் அழிவு

25 கார்த்திகை 2013 திங்கள் 10:24 | பார்வைகள் : 10570


25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் பொழிந்த அமில மழை மற்றும் ஓசோன் குறைவு காரணமாக மிகப்பெரிய அளவிலான அழிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

பெர்மியான் காலத்தின் முடிவில் ஏற்பட்ட இந்த பேரழிவின் போது கடலில் வாழ்ந்த 90 சதவிகித உயிர்களும், நிலத்தில் வசித்த 70 சதவிகித உயிர்களும் இறந்துவிட்டன என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. இதில் மிகவும் அதிர்ச்சியூட்டக்கூடிய மிக கொடிய மிருகங்கள் என அறியப்பட்டனவும் இறந்துவிட்டன என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சைபீரியாவில் மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறியபோது பீச்சியடிக்கப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் சல்பர் டை ஆக்ஸைடு வாயுக்களால் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றமே இந்த அமில மழை அழிவிற்கு காரணம் என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இந்த மிகப்பெரிய அழிவிற்கு பிறகு பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு எந்த உயிர்களும் தோன்றவில்லை என்றும் கிடைத்த படிமங்கள் அடிப்படையில் கருதப்படுகிறது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பூமி தோன்றி சுமார் 500 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டதாக விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்