Paristamil Navigation Paristamil advert login

நெப்ட்யூனின் 14வது நிலாவைக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்

நெப்ட்யூனின் 14வது நிலாவைக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்

17 ஆடி 2013 புதன் 12:06 | பார்வைகள் : 10509


 நெப்ட்யூன் கிரகத்தின் இன்னொரு புதிய நிலவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹப்பளி தொலைநோக்கி மூலம் இந்த புதிய நிலா குறித்த இருப்பு தெரிய வந்துள்ளது. நெப்ட்யூனைச் சுற்றி இது வலம் வந்து கொண்டுள்ளதாம். இது நெப்ட்யூனின் 14வது நிலாவாகும்.


நெப்ட்யூன் நீலம் மற்றும் பச்சை நிறத்திலான கிரகம் ஆகும். இந்த கிரகத்திற்கு இதுவரை 13 நிலாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் நெப்ட்யூன் கிரகத்தின் இன்னொரு நிலவைக் கண்டுபிடித்துள்ளனர் ஹப்பிள் துணையுடன். இது அக்கிரகத்தின் 14வது நிலாவாகும்.
 
இந்த நிலாவுக்கு S/2004 N 1 என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிலவின் சுற்றளவு 19 கிலோமீட்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நெப்ட்யூனின் நிலவுகளிலேயே இதுதான் சிறியதா
 
இந்த நிலவானது சிறிதாகமட்டுமல்லாமல், மங்கலாகவும், பிரகாசம் இன்றியும் காணப்படுகிறது. ஒரு நட்சத்திரத்தை விட 100 மடங்கு டிம்மாகவும் இது காணப்படுகிறது.கடந்த ஜூலை 1ம் தேதி இந்த நிலாவைக் கண்டுபிடித்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்