நிலவை ஆராய்வதால் பூமியின் உருவாக்கத்தை அறியலாம்?

27 வைகாசி 2013 திங்கள் 13:18 | பார்வைகள் : 13959
பூமியின் துணைக்கோளான நிலவின் மேற்பரப்பில் கிடைக்கும் தாதுப்பொருட்கள் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்பாறைகள், விண்கற்கள் நிலவில் மோதியதால் கிடைத்தவையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதனால் நிலவு எதனால் உருவாகியுள்ளது என்று நம்புவதிலும் சில சந்தேகங்கள் எழுந்துள்ளது.
பொதுவாக நிலவின் மேற்பரப்பில் ஸ்பைனல் மற்றும் ஆலிவைன் தாதுப்பொருட்கள் காணப்படுகின்றன.
விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்பாறைகள் மற்றும் விண் கற்களின் பொதுவான கூறுகளாக இந்த ஸ்பைனல் மற்றும் ஆலிவைன் தாதுப்பொருட்கள் இருக்கின்றன.
மேலும் நிலவின் கடினமான மேற்பரப்புகளை ஆராய்வது இந்த சூரிய மண்டலத்தின், பூமியின் உருவாக்கத்தை தெரிந்துகொள்ள உதவும் என்று கூறப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025