450 கோடி ஆண்டுக்கு முன்பு பூமி மோதியதால் சந்திரனில் தண்ணீர் துகள்கள்
11 வைகாசி 2013 சனி 13:56 | பார்வைகள் : 10532
சந்திரனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கு தண்ணீர் துகள்கள் உருவாகுவதற்கான சாத்திய கூறுகள் குறித்து அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக மண்ணியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த 1970-ம் ஆண்டுகளில் சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மற்றும் பாறைகளை பேராசிரியர் அல்பெர்டோ சால் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சி செய்தனர்.
அதில் கடந்த 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியும், சந்திரனும் ஒன்றுக்கொன்று மோதின. அப்போது பூமியில் இருந்த தண்ணீர் மற்றும் அதன் துகள்கள் சந்திரனுக்கு இடம் மாறியிருக்க வேண்டும். பூமியின் எரிமலைகளில் இருக்கும் 'ஒலிவின்' என்ற துகள்கள் சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணில் உள்ளன.
கடந்த 2011-ம் ஆண்டு நடத்திய ஆய்வில் பூமியில் உள்ள எரிமலையின் குழம்பு துகள்களும் சந்திரனின் மண்ணிலும் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.