பூமியின் அளவுடைய 1700 கோடி கிரகங்கள் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

9 தை 2013 புதன் 04:57 | பார்வைகள் : 14378
பால்வெளி அண்டத்தில் மட்டுமே நமது பூமியின் அளவுடைய 1700 கோடி கிரகங்கள் இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக விண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.
நமது சூரியனைப் போன்ற அளவு கொண்ட நட்சத்திரங்களை நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி ஆராய்ந்தது.
அப்படியான நட்சத்திரங்களில் ஆறில் ஒன்றில் பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கலிஃபோர்னியாவில் உள்ள அமெரிக்க விண்ணியல் ஆராய்ச்சிக் குழுமத்தின் முன்பு இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பூமியை ஒத்த அளவில் ஏராளமான கிரகங்கள் இருந்தாலும், இவற்றில் பெரும்பான்மையானவை உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு அதிக வெப்பம் கொண்டவையாக இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர்.
ஒரு கோளத்தில் உயிர்கள் வாழ்வதற்கு, திரவ வடிவில் நீர் வேண்டும்.
ஆனாலும் ஆயிரங்கோடிக் கணக்கில் பூமியை ஒத்த கிரகங்கள் இருக்கின்றபடியால், பூமியைப் போல உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற அம்சங்களைக் கொண்ட கிரகம் ஒன்றை விண்ணியல் நிபுணர்கள் நிச்சயம் கண்டறிவார்கள் என அறிவியில் துறைசாரார் நம்புகின்றனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025