இமயமலையில் பாரிய பூமி அதிர்வு ஏற்படும் அபாயம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
31 மார்கழி 2012 திங்கள் 16:25 | பார்வைகள் : 10527
இந்தியாவில் வடக்கு எல்லையான இமயமலை பகுதியில், கடும் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.
இது, ரிக்டர் அளவில், 8.0 முதல் 8.5 வரை பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கூறிய சிங்கப்பூரை சேர்ந்த, நன்யாங் தொழில் நுட்ப பல்கலை கழக விஞ்ஞானிகள் சிலர் பவுல் டாப்பொன்னியர் என்பவர் தலைமையில், இமயமலை பகுதியில் ஆய்வு நடத்தினர். இவர்களுடன், நேபாளம் மற்றும் பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.
இமயமலை பகுதியில், 1897 மற்றும் 1905, 1934, 1950ஆம் ஆண்டுகளில், பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ரிச்டர் அளவில், 7.8 முதல், 8.9 வரை பதிவாகியுள்ளது. இருப்பினும், 1934 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தில், 150 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிலத்தில் வெடிப்புகள் ஏற்பட்டன.ஆறுகளின் வண்டல் படிவம் மற்றும் மலைச்சரிவுகளை, ரேடியோ கார்பனை பயன்படுத்தி, ஆய்வாளர்கள், பூமியில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்களை ஆய்வு செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில், இமயமலைப் பகுதியில் முன் ஏற்பட்டது போல், அதிக அதிர்வுடன் கடும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அது ரிச்டர் அளவில், 8.0 முதல் 8.5 வரை பதிவாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர் இதனால், இமயமலை பகுதியை சுற்றியுள்ள இடங்களில் நிலத்தில் பெரும் பிளவுகள் ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.