Paristamil Navigation Paristamil advert login

பெரிதாகவும், பிரகாசமாகவும் மாறப் போகும் சந்திரன்

பெரிதாகவும், பிரகாசமாகவும் மாறப் போகும் சந்திரன்

4 வைகாசி 2012 வெள்ளி 04:13 | பார்வைகள் : 11429


இம்முறை விசாகப் பௌர்ணமி தினத்தில் (மே 05) வழமையைவிட சந்திரன் பெரிதாகவும், பிரகாசத்துடனும் காணப்படும் என ஆத்தர் சி கிளார்க் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சந்திரனின் நீள்வட்டப் பாதையில் பூமிக்கருகில் பயணம் செய்யும் புள்ளி இம்முறை பௌர்ணமி தினத்தில் வருவதாலேயே சந்திரன் மிகப்பிரகாசமாக தென்படுவதற்கு காரணம் என மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கும் சந்திரனுக்குமிடையியே 384,000 கிலோமீற்றர் தூரம் இருக்கின்ற போதிலும், இம்முறை பௌர்ணமி தினத்தில் இந்தத் தூரம் 356,955 கிலோமீற்றராகவே காணப்படும்.

18 வருடங்களின் பின்னர் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும் சந்தர்ப்பம் இதுவாகும். இதனால் சாதாரணமாகத் தென்படுவதைவிட 14 வீதம் பெரிதாக சந்திரன் தென்படும். அத்துடன், 30 வீதம் அதிக பிரகாசத்துடன் இம்முறை சந்திரன் இருக்கும் எனவும் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும், இதனால் ஆழிப் பேரலையென யாரும் பீதிகொள்ளத் தேவையில்லையெனவும் ஆத்தர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்