Paristamil Navigation Paristamil advert login

Élancourt : காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதிய ஈருருளி - இளைஞன் பலி

Élancourt : காவல்துறையினரின் மகிழுந்துடன் மோதிய ஈருருளி - இளைஞன் பலி

7 புரட்டாசி 2023 வியாழன் 07:37 | பார்வைகள் : 4474


மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இளைஞன் ஒருவனைகாவல்துறையினரின் மகிழுந்து ஒன்று மோதித்தள்ளியுள்ளது. இருகாவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

 

Élancourt (Yvelines) நகரில் இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணிஅளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பான துல்லியமான தகவல்கள்கிடைக்கப்பெறவில்லை என்றபோதும், அதிவேகமாக பயணித்தகாவல்துறையினரின் மகிழுந்து இளைஞனை மோதியதில் அவன் தூக்கி வீசப்பட்டுபடுகாயம் அடைந்ததாகவும், Clichy (Hauts-de-Seine) நகரில் உள்ள Beaujon மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மாலை 7.30 மணி அளவில்அவன் பலியானதாகவும் அறிய முடிகிறது. 

 

இச்சம்பவத்துக்கு முன்னதாக, குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிள் பந்தயம்ஒன்றில் கலந்துகொண்டதாகவும், விபத்தின் போது இளைஞன் தலைக்கவசம்அணிந்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இச்சம்பவத்தை அடுத்து விபத்துக்கு காரணமாக அமைந்த மகிழுந்தில் பயணித்தஇரு காவல்துறையினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்