சீனாவில் IPhone பயன்படுத்த தடை விதிப்பு
7 புரட்டாசி 2023 வியாழன் 12:07 | பார்வைகள் : 6526
சீனாவில் வேலை நேரத்தில் Apple நிறுவனத்தின் iPhoneகளையும் அந்நிய நாட்டு முத்திரையிலான கருவிகளையும் பயன்படுத்தவேண்டாம் என மத்திய அரசாங்கம் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் அத்தகைய கருவிகளை அலுவலகத்துக்குக் கொண்டுவர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை Apple நிறுவனம் அடுத்த வாரம் புதிய iPhoneகளை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் இந்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு சீனாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இது கவலையை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக சீனா - அமெரிக்காவுக்கு இடையிலான பதற்றம் இன்னும் மோசமாகலாம் என்றும் ஆய்வாளார்கள் கருதுகின்றனர்.
அதேவேளை அந்நியத் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கச் சீனா பல ஆண்டுகளாகப் போராடுகிறது.
அதன்படி சீனாவிலுள்ள வங்கி உள்ளிட்ட தேசிய நிறுவனங்களிடம் உள்ளூர் மென்பொருளைப் பயன்படுத்துமாறும் சீனா வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.