Paristamil Navigation Paristamil advert login

கவின் நடிக்கும் ஸ்டார் படத்தில் இரு நடிகைகளா?

கவின் நடிக்கும் ஸ்டார் படத்தில் இரு நடிகைகளா?

7 புரட்டாசி 2023 வியாழன் 15:40 | பார்வைகள் : 6322


கவின் நடிப்பில், இயக்குனர் இளன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஸ்டார்’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

யுவன் சங்கர் ராஜா இசையில், எழிலரசு ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில், வினோத் ராஜ்குமார் கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் ஒருவர் பாலிவுட் நடிகை என்றும் இன்னொருவர் மாடல் அழகி என்றும் கூறப்பட்டது. அந்த வகையில் தற்போது வெளி வந்திருக்கும் தகவல் படி இந்த படத்தில் அதிதி பொஹங்கர் மற்றும் பிரீத்தி முகுந்தன் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் அதிதி பொஹங்கர், ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ என்ற திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரீத்தி முகுந்தன் பிரபல மாடல் அழகியாக உள்ளார். இந்த இரு நடிகைகள் ’ஸ்டார்’ படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் விரைவில் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்